search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூரண மதுவிலக்கு"

    மிசோரம் மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
    அய்ஸ்வால்:

    மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் அம்மாநிலத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மிசோரமில் 1997-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை மதுவிலக்கு அமலில் இருந்தது. 2015-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி அளித்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற மிசோ தேசிய முன்னணி பூரண மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்தது. அதன்படி 4 ஆண்டுகளுக்கு பிறகு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக அம்மாநில கலால் மற்றும் போதைபொருள் தடுப்பு ஆணையர் கூறியதாவது:-

    மிசோரம் பூரண மது விலக்கு சட்டம் 2019-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து ஏப்ரல் 1-ந்தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் பாராளுமன்ற தேர்தல் முடியும் அவரை மதுவிலக்கு தொடர்பாக அறிக்கை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் பூரண மதுவிலக்கு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளோம் என்றார்.
    மூத்த காங்கிரஸ் தலைவரும் காந்தீய வாதியுமான குமரிஅனந்தன் பூரண மது விலக்கை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். #KumariAnandan
    சென்னை:

    மூத்த காங்கிரஸ் தலைவரும் காந்தீய வாதியுமான குமரிஅனந்தன் பூரண மது விலக்கை வலியுறுத்தி போராடி வருகிறார். இந்த கோரிக்கைக்காக ஆண்டு தோறும் காந்தி ஜெயந்தி தினத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    அதன்படி இன்றும் வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதம் இருந்தார். முன்னதாக காந்தி, காமராஜர், சாஸ்திரி படங்களுக்கு மரியாதை செலுத்தினார். இதில் மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் மற்றும் மது விலக்குக்காக போராடும் தியாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்து வரும் குமரி ஆனந்தனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #KumariAnandan
    ×